மாஸ்கோ: வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள சோச்சி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அதிபர் புடின்: இந்தியா சிறந்த நாடு, நாங்கள் அனைத்து வழிகளிலும் எங்களது உறவை மேம்படுத்தி வருகிறோம். இந்தியா மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரியது.
ஒவ்வொரு ஆண்டும் 1.5 பில்லியன் மற்றும் 10 மில்லியன் மக்கள் அதிகரிக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. மற்ற எந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா தகுதியானது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவுகள் எங்கு, எந்த வேகத்தில் வளரும் என்பது பற்றிய நமது பார்வையானது இன்றைய யதார்த்தங்களை அடிப்படையாக கொண்டது.
பாதுகாப்பு மற்றும் ராணுவ துறையில் இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான தொடர்புகள் வளர்ந்து வருகின்றது. இந்திய ஆயுத படைகளுடன் எத்தனை வகையான ரஷ்ய ராணுவ உபகரணங்கள் சேவையில் உள்ளது என்பதை பாருங்கள். இந்த உறவில் அதிக நம்பிக்கை உள்ளது. நாங்கள் வெறும் எங்களது ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்கவில்லை. நாங்கள் கூட்டாக இணைந்து வடிவமைக்கிறோம். எடுத்துக்காட்டாக பிரம்மோஸ் ஏவுகணை கப்பல் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு புடின் பேசினார்.
The post வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது: ரஷ்ய அதிபர் புடின் கருத்து appeared first on Dinakaran.