வலுவான நிலையில் மும்பை: இரட்டை சதம் விளாசினார் சர்பராஸ்

3 months ago 23

லக்னோ: இதர இந்திய அணியுடனான இரானி கோப்பை போட்டியில், ரஞ்சி சாம்பியன் மும்பை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், மும்பை முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரகானே 86, சர்பராஸ் கான் 54 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரகானே 97 ரன்னில் (234 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் 57, தனுஷ் கோடியன் 64, ஷர்துல் தாகூர் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் இரட்டை சதம் விளாசி அசத்தினார். ஷாம்ஸ் முலானி (5), மோகித் அவஸ்தி (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 2வது நாள் முடிவில் மும்பை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. சர்பராஸ்கான் 221 ரன் (276 பந்து, 25 பவுண்டரி, 4 சிக்சர்), முகமது ஜூனத்கான்(0) களத்தில் உள்ளனர். இதர இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4, யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2, சரன்ஷ் ஜெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post வலுவான நிலையில் மும்பை: இரட்டை சதம் விளாசினார் சர்பராஸ் appeared first on Dinakaran.

Read Entire Article