வலுவான சாட்சியம் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும் : சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பேட்டி

4 hours ago 2

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன? என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு..

A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை – ரூ.40,000 அபராதம்
A2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.35,000 அபராதம்
A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை – ரூ.18,500 அபராதம்
A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை – ரூ.13,500 அபராதம்
A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.18,000 அபராதம்
A6 குற்றவாளி பாபு-க்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.10,500 அபராதம்
A7 குற்றவாளி ஹெரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனை -ரூ.14,000 அபராதம்
A8 குற்றவாளி அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,500 அபராதம்
A9 குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,000 அபராதம்

மேலும் பேசிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன்,”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வலுவான சாட்சியங்கள் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் இந்த பொள்ளாச்சி வழக்கு முன்னுதாரணமாக உள்ளது. வலுவான சாட்சியம் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ நல்ல முறையில் விசாரணை நடத்தியுள்ளது. ரகசிய குழுக்களை
அமைத்து பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் கூட வெளியில் வராத வகையில் விசாரணை நடத்தப்பட்டது.”என்றார்.

The post வலுவான சாட்சியம் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும் : சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article