வலங்கைமான் அருகே மாரியம்மன் கோயில் திருப்பணிகள்

3 weeks ago 4

வலங்கைமான், டிச. 31: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி பகுதியில் உள்ள தில்லை மாரியம்மன் கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்ய வந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் நவகிரகங்களை ஒன்றாக வலங்கைமான் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனையடுத்து ஆலங்குடியில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் தில்லை மாரியம்மன் கோயில் திருப்பணிகளை ஆய்வுசெய்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் (கிழக்கு) தட்சிணாமூர்த்தி திமுக இளைஞரணி ரஞ்சித், ஆலங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உடன் இருந்தனர்.

The post வலங்கைமான் அருகே மாரியம்மன் கோயில் திருப்பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article