வாஷிங்டன்: பெரும்பாலான நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீதான வரியை மேலும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா- சீனா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் ட்ரம்ப் நேற்று இரவு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி பெரும்பாலான நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்ட அவர் சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பை மேலும் அதிகரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீதம் வரிவிதித்தது சீனா இந்த வரிவிதிப்பை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேர கால கெடு விதித்த ட்ரம்ப் காலக்கெடு முடிவடைந்த பிறகு சீனா மீது 104 சதவீத வரிவிதித்து அதிரவைத்தார்.சீனாவும் ட்ரம்பின் நடவடிக்கைக்கு சற்றும் அஞ்சாமல் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 84 சதா வீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். சீனாவின் நடவடிக்கைகளால் கடும் கோபம் அடைந்த ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 125 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய அவமரியாதை காரணமாக சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை 125 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா- சீனா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் 12 அமெரிக்க நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது சீனா இந்த நிறுவனங்கள் சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வர்த்தக போர் உச்சக்கட்டம்: சீன பொருட்கள் மீதான வரியை 125 சதவிகிதமாக உயர்த்திய அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.