வருவாய் உதவியாளர் இனி முதுநிலை வருவாய் ஆய்வாளர்: பதவி பெயரை மாற்றி அறிவித்தது தமிழக அரசு

3 months ago 14

சென்னை: தமிழக அரசின் வருவாய்த் துறையில் வருவாய் உதவியாளர், இளநிலை வருவாய் உதவியாளர் ஆகியோர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் என அழைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மனித வள மேலாண்மைத்துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழக வருவாய்த்துறையில் இளநிலை வருவாய் உதவியாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர், இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

Read Entire Article