திருவாரூர், ஜன. 30: திருவாரூர் மாவட்ட காவல் துறையில் கழிவினம் செய்யப்பட்ட 10 நான்கு சக்கர வாகனங்கள் அடுத்த மாதம் 10ந் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்பி கருண்கரட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; திருவாரூர் மாவட்ட காவல் துறையில் கழிவினம் செய்யப்பட்ட சுமோ விக்டர் -5,சுமோ கிராண்டி ஒன்று, பொலிரோ – 2 ரெக்கர் ஒன்று மற்றும் டெம்போ டிராவலர் ஒன்று என மொத்தம் 10 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டுள்ளன.
இதனையொட்டி அடுத்த மாதம் 10ந் தேதி திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணி அளவில் பொது ஏலம் நடைபெற உள்ளதால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க விரும்பும்புவர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுக்கலாம். இவ்வாறு எஸ்.பி. கருண்கரட் தெரிவித்துள்ளார்.
The post வரும் 10ம் தேதி நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் appeared first on Dinakaran.