வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

10 hours ago 2

பணியிடங்கள் விவரம்:

1. ஹவில்தார்: 14 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள் 152 செ.மீ., உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும்.
2. வரி உதவியாளர்: 10 இடங்கள். சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது வரம்பு: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஒரு நிமிடத்தில் 80 எழுத்துக்களை ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. பல்நோக்கு பணியாளர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 31.07.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறையின்படி தளர்வு அளிக்கப்படும்.
விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் விவரம்

Archery, Atya-Patya, Ball-Badminton, Basket ball, Body-Building, Bridge, Chess, Cycling, Deaf Sports, Fencing, Golf, Handball, Ice-Hockey, Ice Skiing, Kabadi, Kayaking & Canoeing, Judo, Motor Sports, Para Sports (for sports discipline including in Para Olympics and Para Asian Games), Polo, Shooting, Roll Ball, Rowing, Sepak Takraw, Soft Tennis, Swimming, Taekwondo, Tennis, Triathlon, Volley Ball, Wushu, Yachting, Yogasana, Athletics, Badminton, Baseball, Billiards &Snookers, Boxing, Carrom, Cricket, Cycling Polo, Equestrian, Football, Gymnastics, Hockey, Ice-Skating, Judo, Karate, Kho-Kho, Mallakhamb, Net Ball, Pencak Silat, Power lifting, Shotting Ball, Roller Skating, Rugby, Soft Ball, Squash, Table Tennis, Tenpin Bowling, Tug-of-war, Weight lifting, Wrestling, Tennis Ball Cricket.

www.kolkatacustoms.gov.in என்ற இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அதனுடன் கல்வித்தகுதி, விளையாட்டுத் தகுதி ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025.

The post வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை appeared first on Dinakaran.

Read Entire Article