வருண் தவானுடன் மீண்டும் இணையும் ஷ்ரத்தா கபூர் ?

1 month ago 7

மும்பை,

அமர் கவுசிக் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் பேடியா. இப்படத்தில், வருண் தவான், கிருத்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதிலும், வருண் தவானே கதாநாயகனாக நடிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், வருண் தவானுடன் மீண்டும் ஷ்ரத்தா கபூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வரும் செங்கடல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஷ்ரத்தா கபூர் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனக்கு தெரியாது. கேமியோ ரோலில் நடிப்பேனா இல்லையா என்பதை காலம்தான் சொல்லும். மிக விரைவில், நான் நடிக்கும் படங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறேன்' என்றார். முன்னதாக ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 படத்தில்  வருண் தவான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article