
புவனேஷ்வர்,
ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் 21 வயது பெண், அவரது வருங்கால கணவன் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20ம் தேதி 21 வயது இளம்பெண் தனது வருங்கால கணவருடன் பதேகர் ராமர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பித்தகை காடு அருகே இருவரையும் வழிமறித்து, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுக்குள் அழைத்துச் சென்று வருக்கால கணவர் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மேலும், அவர்கள் இந்த சம்பவத்தை போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று பதேகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.