வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை தான்யா

8 hours ago 2

சென்னை,

தனது காதலருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் யார் என்பதை நடிகை தான்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் மறைந்த ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா, சசிகுமார் நடிப்பில் வெளியான 'பலே வெள்ளையத்தேவா' படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர், 'பிருந்தாவனம்', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்', 'ரசவாதி' போன்ற படங்களில் நடித்த தான்யா, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் நடித்து வந்த தான்யா இன்ஸ்டாவில் அப்படியே கிளாமரில் கலக்கி வந்தார். இந்நிலையில், 'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் கவுதமுடன் நடிகை தான்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.தனது வருங்கால கணவருடன் லிப் லாக் முத்தம் கொடுத்தபடி புகைப்படம் வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article