விருதுநகர்: விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(38). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமாரை, வரிச்சியூர் செல்வம் தரப்பினர் கடந்த 2023ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உடலை தாமிரபரணி ஆற்றில் வீசினர்.
இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த விருதுநகர் கிழக்கு போலீசார், வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் நடைபெற்று வருகிறது. நேற்று நீதித்துறை நடுவர் ஐயப்பன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். இதையடுத்து விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
The post வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.