வரி விதிப்பு பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அழைப்பை பரிசீலிக்கிறோம்: சீனா தகவல்

3 weeks ago 5

பீஜிங்: வரிவிதிப்பு தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதுகுறித்து பரிசீலிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் சீனா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதித்தார். அதன் பின்னர், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை அறிவிக்கும்போது மீண்டும் சீனாவின் மீது 34 சதவீத வரியை விதித்தார். இப்படி ஒவ்வொரு முறை அமெரிக்கா சீனா மீது வரி விதித்தப் போதும், பதிலடியாக, அமெரிக்கா மீது சீனா வரி விதித்தது.தற்போது சீனாவின் மீதான அமெரிக்க வரி 245 சதவீதத்தில் வந்து நின்றுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா பேச்சு நடத்த அழைப்பு விடுத்ததாகவும் அதுகுறித்துப் பரிசீலித்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் அமெரிக்கா பலமுறை தொடர்புடைய கட்சிகள் மூலம் சீனாவுக்கு செய்திகளை தெரிவிக்க முயன்று வருவதால், சீனா மதிப்பீடு செய்து வருகிறது. வரி பிரச்னைகள் குறித்து எங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

சீன அரசு செய்தி தொடர்பாளர்,‘‘ வரி மற்றும் வர்த்தகப் போர் அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்டன. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அது நேர்மையை நிரூபிக்க வேண்டும்.தவறான நடைமுறைகளை சரிசெய்தல் மற்றும் ஒருதலைப்பட்ச வரிகளை நீக்குதல் போன்ற பிரச்னைகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post வரி விதிப்பு பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அழைப்பை பரிசீலிக்கிறோம்: சீனா தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article