நன்றி குங்குமம் தோழி
சென்னையை சேர்ந்த `கீதம் மேட்ரிமோனியல்’ அரங்கம், கண்காட்சியில் சப்தம் இல்லாமல் மக்களை தன்பக்கம் இழுத்தது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீதா தெய்வ சிகாமணி கூறியதாவது,‘‘எங்களின் நிறுவனம் சென்னையில் 1997ம் ஆண்டு துவக்கப்பட்டது. பிற மேட்ரிமோனியல் சர்வீஸ் போல் அல்லாமல், வரன் தேடுவோரை நேரில் வரவழைத்துப் பேசி, அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரன் தேடிக்கொடுப்பது எங்களது தனிச்சிறப்பு. குடும்பச்சூழல், வருவாய் நிலவரம், எதிர்பார்ப்பு அனைத்திற்கும் ஏற்ப வரன்களை அமைத்து தருகிறோம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 700க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். ஏழை, நடுத்தர, உயர் வர்க்கம் என அனைத்து தரப்பினருக்கும் வரன் அமைத்து தருகிறோம். நாங்க திருமணம் செய்து வைத்த தம்பதியினர் அவர்களின் பிள்ளைகளுக்கும் வரன் தேடி எங்களிடம் வருகிறார்கள். இதைவிட வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் வேறு என்ன இருக்க முடியும்?’’
கோவையில் ‘தோழி’யின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா!
பெண்கள் பொதுவாகவே ஷாப்பிங் பிரியர்கள். சமீபகாலமாக ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மாறி இருந்தாலும், நேரடி ஷாப்பிங்கிற்கான மவுசு குறையவில்லை. விரும்பும் பொருட்களை நேரடியாக பார்த்து வாங்கும்போது நாம் தரமான பொருட்களை தேர்வு செய்திருக்கிறோம் என்ற மனத் திருப்தி கிடைக்கும். அதற்காகவே கோவை கொடிசியா வளாகத்தில் தினகரன் குழுமம், தோழி
பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 14,15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழாவினை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி அவர்கள் தொடங்கி வைத்தார். திருவிழாவினை அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி சேலம், பேராசிரியர்கள் மோகன்ராஜ், மெடிமிக்ஸ் ஆயுர்வேதிக் சோப் மாநில விற்பனை மேலாளர் ஹரிஹரன், கீதம் மேட்ரிமோனியல் தலைமை நிர்வாக அதிகாரி கீதா தெய்வசிகாமணி, நேஹாஸ் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் ரணிதா ராஜேந்திரசிங் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர். காண்போரை கவரும் வகையில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் வீடுகளுக்கு தேவையான பொருட்கள், பூஜை பொருட்கள், கட்டில்கள், மிக்சி, கேஸ் ஸ்டவ், திரைச்சீலைகள், டேபிள் கிளாத், தலையணை உறைகள், ஹேண்ட் பேக், சோபா செட், மின்சார வாகனம் என பல ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஆரோக்கியமான உணவுக்கு அதிகளவில் முக்கியத்தும் அளிக்கப்பட்டு அதற்கென பிரத்யேக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளுக்கான சத்துமாவு, இயற்கை முறையில் எடை குறைக்கும் பொடி, சிறுதானியங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் கேழ்வரகு, ராகி, கம்பு, சோளம், சிவப்பு அரிசி அடங்கிய சுகர் ப்ரீ உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. எலும்பு சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலான ஆயுர்வேதப் பொருட்களுக்கான ஸ்டால்கள் என அனைத்துப் பொருட்களும் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது. மேலும், ஷாப்பிங் செய்து முடித்தவர்கள் உணவு சாப்பிடும் வகையில், தட்டு வடை, வெஜ் ரோல், சிக்கன் ரோல், பானி பூரி, பேல் பூரி, மசாலா பூரி, டீ, காபி, வெரைட்டி ரைஸுக்கென தனிப்பட்ட இடம் அமைக்கப்பட்டு இருந்தது. பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குடும்பத்தோடு வந்து ஆர்வமுடன் ஷாப்பிங் செய்ய அனைத்துப் பொருட்களுக்கான ஷாப்பிங் திருவிழாவாக இருந்தது. தோழி ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன.
விழாவினை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி அவர்கள் பேசுகையில் ‘‘பெண்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் செய்திகள் வழங்கப்படுகிறது. ஆனால் எவ்வித தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலமான 1936களில் அறிவுக்கொடி சிற்றிதழை
சிவகாமி அம்மாள் நடத்தியுள்ளார். அப்போதைய குடியரசு நாளிதழில் எழுத்தாளர்களாக மாசிலாமணி, நீலாவதி அம்மையார், லட்சுமி, பண்டிதை ரங்கநாயகி என பலரும் இருந்தனர். இப்படியாக பெண்களின் கல்வி, பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக பல இயக்கங்கள் மற்றும்
நாளிதழ்கள் தங்களது பங்களிப்பினை செலுத்தி வருகின்றன. அதில் பெண்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் காலச்சூழலில் பெண்களுக்கென தோழி வாலன்டைன் ஷாப்பிங்
திருவிழா நடத்தப்படுவது என்பது பாராட்டுக்குரியது’’ என்றார்.
அட்மிஷன் போடுங்க… கை நிறைய சம்பளம் அள்ளுங்க!
கண்காட்சியில் இடம்பெற்ற சேலம் அன்னபூர்ணா இன்ஜினியரிங் கல்லூரி ஸ்டாலில் மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கல்லூரி பேராசிரியர்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் விளக்கம் அளித்தனர். இங்கு ஆட்டோமொபைல், பயோ
மெடிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என 9 இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளும், கம்ப்யூட்டர் சயின்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ் ஆகிய 2 முதுகலை இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளும் உள்ளன. மாணவ, மாணவிகளில் 98% கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஹாஸ்டல் வசதி உள்ளதாக அவர்கள் கூறினார்கள்.
திரும்பிப் பார்க்க வைக்கும் `நேகாஸ் சில்க்ஸ்’
இன்றைய விஞ்ஞான உலகில் பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளன. அதை ஒழிக்கவே தனித்துவமான பாரம்பரியம் மிக்க துணிப்பைகளையும், அது சார்ந்த மாற்றுப்பொருட்களையும் பயன்படுத்த துவங்க வேண்டும் என்கிறார் `நேகாஸ் சில்க்ஸ்’ நிறுவன உரிமையாளர் ரனிதா ராஜேந்திரசிங்.‘‘நாங்க தனித்துவமான பாரம்பரியமிக்க பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை திருநெல்வேலியில் கடந்த 2005ம் ஆண்டு துவக்கினோம். பெண்கள் பயன்படுத்தும் ைகப்பைகளை பல்வேறு வண்ணம் மற்றும் டிசைன்களில் தயார் செய்கிறோம். இதில், துளியும் பிளாஸ்டிக் சேர்ப்பதில்லை. முழுக்க முழுக்க துணி மற்றும் சணல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பாரம்பரிய பொருட்களால் தயாரிக்கிறோம். பொதுவாக, பட்டுச்சேலை என்றால், வாஷ் செய்ய முடியாது என்பார்கள். ஆனால், நாங்கள் வாஷ் செய்யக்கூடிய வகையிலும் பட்டுச்சேலை நேர்த்தியாக தயாரிக்கிறோம். பெண்களுக்கான சல்வார்ஸ் உடைகளும் எங்களிடம் உள்ளது. பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பாரம்பரிய ஆடைகளும் இங்குண்டு. இவை தவிர லேப்டாப் கவர், செல்போன் கவர், பர்ஸ், பைபிள் கவர், தலையணை மற்றும் சோபா கவர் என பல்வேறு வகையான பொருட்கள் துணிகளில் தயாரித்து கொடுக்கிறோம். இவை எல்லாமே கைவினைஞர்களால் உருவாக்கப்படுகிறது.’’
மெடிமிக்ஸின் மூலிகைப் பொருட்கள்
தோழி ஷாப்பிங் திருவிழாவில் மெடிமிக்ஸ்(ஏவிஏ) தயாரிப்பு பொருட்கள் ஒன்று வாங்கினால் அதற்கு இணையாக இன்னொரு பொருள் இலவசமாக வழங்கப்பட்டது. எவ்வித பக்க விளைவுக்கும் இடமில்லாத வகையில், முற்றிலும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தின் பொருட்களுக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. இதுபற்றி நிறுவன விற்பனை மேலாளர் ஹரிஹரன் கூறியதாவது, ‘‘மெடிமிக்ஸ் (ஏவிஏ) நிறுவனம் 1969ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதற்கு முன்பாக, கேரளாவை சேர்ந்த டாக்டர் சித்தன், சென்னை பெரம்பூரில் ரயில்வே துறையில் ஆயுர்வேத டாக்டராக பணிபுரிந்து வந்தார். ரயில்வே தொழிலாளர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் ஆயுர்வேத சோப்பு உள்ளிட்ட பொருட்களை வீட்டிலேயே தயாரித்து, தொழிலாளர்களுக்கு வழங்கி வந்தார். மக்கள் மத்தியில் இவர்களின் பொருட்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்க தன் மனைவியுடன் இணைந்து வீட்டிலேயே பல்வேறு வகையான ஆயுர்வேத சோப்புகளை தயாரித்தனர். இன்று மெடிமிக்ஸ் நிறுவனம் சார்பில் சோப்பு, கிளிசரின், ஆர்த்தோ பாம், மூலிகை ஹேண்ட் வாஷ், ஷாம்பூ என எண்ணற்ற பொருட்கள் உள்ளன. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் பொருட்கள் உள்ளன. 15 கிராம் முதல் 20 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான சோப்பு எங்களின் தனிச்சிறப்பு. மெடிமிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான ‘மேளம்’ பிராண்டில் வெளிவரும் மசாலாப் பொருட்கள் மற்றும் உடனடி உணவுத் தயாரிப்பு பொருட்களும் நல்ல தரத்துடன் வழங்கி வருகிறோம்’’ என்றார் ஹரிஹரன்.
தொகுப்பு: ப்ரியா
The post வரன் தேடுவோருக்கு முத்திரைப் பதிக்கும் கீதம் மேட்ரிமோனியல் appeared first on Dinakaran.