வரத்து குறைவால் தக்காளி விலை அதிரடி உயர்வு

2 hours ago 4

சென்னை,

தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த 3 தினங்களாக கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

அந்தவகையில் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டதை காண முடிந்தது.

தொடர்ந்து விலை அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படக்கூடிய சில குறிப்பிட்ட ரக ஆப்பிள் விலையுடன் போட்டி போடும் அளவுக்கு அதன் தக்காளியின் விலையும் உயரலாம் என வியாபாரிகள் சொல்கின்றனர். தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

Read Entire Article