வரதராஜபெருமாள் கோயிலில் இன்று வடகலை, தென்கலையினர் மோதல்

6 hours ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின்போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கி வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரமோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இக்கோயிலில் இந்தாண்டு வைகாசி பிரமோற்சவ விழாவை நேற்று (11ம் தேதி) கருடாழ்வார் பொறித்த சின்னத்தை கொடிமரத்தில் கோயில் பட்டாச்சாரியர்கள் ஏற்றி துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் பூஜைகள் நடந்தன.

பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, இன்று காலை அலங்கரிக்கப்பட்ட அம்ச வாகனத்தில் பெருமாள் வீதியுலா புறப்பாடும், அதற்கு முன் பெருமாளுக்கு மந்திர புஷ்பம் பாராயணம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டு, இருதரப்பினரும் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

The post வரதராஜபெருமாள் கோயிலில் இன்று வடகலை, தென்கலையினர் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article