வயநாட்டில் பிரியங்கா வெற்றி - ராகுல்காந்தி நெகிழ்ச்சி

3 hours ago 2

புதுடெல்லி,

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இந்த மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி சாத்தியமாக்கி உள்ளார்.

இந்த நிலையில் , வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது தொடர்பாக அவரது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியதாவது,

வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பிரியங்காவின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமை அடைகிறேன். வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார் . என தெரிவித்துள்ளார். 

Read Entire Article