வயநாட்டில் அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்த தங்கை பிரியங்கா

7 months ago 27

வயநாடு,

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் அண்ணன் ராகுல் காந்தியின் சாதனையை தங்கை பிரியங்கா காந்தி முறியடித்துள்ளார். கடந்த மே மாதம் வயநாட்டில் நடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகள் பெரும் அளவில் உள்ளதால் பிரியங்கா காந்தி வயநாட்டில் மகத்தான வெற்றியை பெறுவார் என கூறப்படுகிறது.

முன்னிலை நிலவரம்:-

காங்கிரஸ் - 6,10,944 (4,03,966 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை)

சி.பி.ஐ - 2,06,978

பா.ஜனதா - 1,07,971

Read Entire Article