கும்மிடிப்பூண்டி: வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு தமிழக அரசு வழங்காததை கண்டித்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநில துணை பொது செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தனர். மாநில துணை தலைவர் துரைஜெயவேல் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினரை சிப்காட் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆவடி: ஆவடி மாநகராட்சி அருகே எம்.ஜி.ஆர் திடலில், திருவள்ளூர் மத்திய மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பஜாரில் பாமக மாவட்ட தலைவர் பா.விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் குப்புசாமி, மாணிக்கம், பாரதி, பாலு, விஜயன் திருமூர்த்தி, தொகுதி தலைவர் ஜெகன் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
திருத்தணி: திருத்தணியில் கமலா திரையரங்கம் அருகில் பாமக நகர செயலாளர் சேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பள்ளிப்பட்டில் நகரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக மாவட்ட துணை செயலாளர் லோகன் தலைமை வகித்தார். இதில், 70 பேர் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தினர்.
திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி வரவேற்றார். வட்ட நிர்வாகிகள் வாசுதேவன், குமார், ரமேஷ், செஞ்சிகுமார், சரவணன், அஜித் குமார், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், சுரேஷ், கேசவன், வினோத், சண்முகம், ஏழுமலை முன்னிலை வகித்தனர். இதில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி கோரிக்கை வலியுறுத்தி பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர் செல்வம், ஜோதி வெங்கடேசன், கேசவன், அன்பு, நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
The post வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.