வன்னியர் மாநாட்டிற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பாமக கௌரவத் தலைவர் ஜி .கே. மணி பேட்டி

14 hours ago 5

சென்னை : வன்னியர் மாநாட்டிற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பாமக கௌரவத் தலைவர்
ஜி .கே .மணி பேட்டி அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக 11.05.2025- தேதியன்று மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவுக்கு பல்வேறு கட்டுபாடுகளை காவல்துறை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2013ல் நடந்த மாநாட்டில் பல்வேறு வன்முறையால் அரசு சொத்துகள் சேதம் பலருக்கு காயம் ஏற்பட்டதால் மாநாட்டிற்கு 12ண்டுகள் தடை விதிக்கப்பட்டது.11ம் தேதி நடைபெறும் மாநாட்டில் மது அருந்த கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த கூடாது என 42 கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

செங்கல்பட்டு எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமகபாமக கௌரவ தலைவர் ஜி.கே மணியிடம் மாநாடு கட்டுபாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

The post வன்னியர் மாநாட்டிற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பாமக கௌரவத் தலைவர் ஜி .கே. மணி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article