திருச்சி, ஏப். 25: வன உரிமைசட்டம் தொடா்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வன உரிமைச் சட்டம்-2006 நடைமுறைப்படுத்துவது தொடர்பாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான பயிற்சி வகுப்பினை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து வன உரிமைச் சட்டத்தை அலுவலா்கள் தொிந்து கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பேசினர். இப்பயிற்சியில் ஒடிசா மாநில வசுந்தரா நிறுவனத்தைச் சார்ந்த கிரிராவ் பயிற்சி வகுப்பிற்கு வருகை புரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் தெளிவான பயிற்சி மற்றும் வழிமுறைகளை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தினை எவ்வித தொய்வும் இல்லாமல் திறம்பட செயல்படுத்தி பழங்குடியினர் மக்களுக்கு சேர வேண்டிய உரிமையினை பெற்றுத்தந்து திறம்பட செயல்படுமாறு வருகை புரிந்த அனைத்து அலுவலர்களுக்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில், வருவாய் அலுவலா் பழங்குடியினா் நல இணை இயக்குநா் சுரேஷ்குமார், ஒடிசா மாநில வசுந்ரா நிறுவன மேலாண்மை இயக்குநா் கிரிராவ் மாவட்ட வன அலுவலா்கள் கிருத்திகா (திருச்சி), இளங்கோவன்(அரியலூர்), குகனேஷ்(பெரம்பலூர்), வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி இயக்குநா்கள் (ஊராட்சி),வன உரிமைச் சட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பகவநிதி, திருச்சி மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ரெங்கராஜ், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி வன பாதுகாவலா், வனச் சரக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
The post வன உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.