வத்தலக்குண்டு அருகே முறிந்து விழுந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு

1 month ago 11

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் உள்ள வேப்பமரம் 50 ஆண்டு கால பழமை வாய்ந்தது. ஊரில் உள்ள முதியோர்கள், பஸ் ஏறுவதற்காக காத்திருப்பவர்கள் வேப்பமரத்தை சுற்றியுள்ள சிமெண்ட் திண்ணையில் அமர்வது வழக்கம். ஏற்கனவே பெய்த மழையில் வேப்பமரம் நன்றாக ஊறி போயிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீசிய அடித்த பலத்த காற்றில் வேப்பமரத்தின் ஒரு பகுதி பெரிய கிளை முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால் அவ்வழியே சென்ற மின்சார வயர்கள் அறுந்து விழுந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதுடன், வத்தலக்குண்டு- ஆண்டிபட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. மேலும் அந்த நேரத்தில் ஆட்கள் யாரும் அங்கு அமராததால் பெரும் விபத்து எதுவும் நடக்கவில்லை. தகவலறிந்ததும் மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விழுந்த மின்வயர்களை சீரமைத்தனர். தொடர்ந்து வேப்பமர கிளையை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

The post வத்தலக்குண்டு அருகே முறிந்து விழுந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article