ஊட்டி, மே 16: குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும் என அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வேலையளிப்போர் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து தனியார் நிறுவனங்களில் திருக்குறளும், அதன் உரையும் எழுதும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு ெதாழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்போது சிறப்பு மதிப்பெண்கள் இனிவரும் காலங்களில் வழங்கப்படும். இவ்வாறு உதவி ஆணையர் தாமரை மணாளன் தெரிவித்துள்ளார்.
The post வணிக நிறுவனங்களில் தினம் ஒரு திருக்குறள் உரையுடன் வைக்க வேண்டும்: தொழிலாளர் துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.