'வணங்கான்' படத்தின் 'முகிலின் மேலே' பாடல் வெளியீடு

6 months ago 23

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் நடத்தியுள்ளார்.

இப்படம் வருகிற 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'வணங்கான்' படத்தின் 3-வது பாடலான 'முகிலின் மேலே' என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடலை பாடகி சைந்தவி பாடியுள்ளார்.

Feel the magic of love in every note! ✨ The 3rd single #Mugilinmele from #Vanangaan is here to steal your hearts. A melody that lingers forever. ️ Out now!https://t.co/QqoURXIBlT@arunvijayno1 's #Vanangaan @IyakkunarBala 's #VanangaanA @gvprakash Magic✨…

— sureshkamatchi (@sureshkamatchi) January 6, 2025
Read Entire Article