தேவையானவை:
வடுமாங்காய் – அரை கிலோ,
கடுகுப் பொடி – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 25 கிராம்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,
கல் உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, ஈரமில்லாமல் துடைக்கவும். காம்பை நீக்கிவிட்டு நல்லெண்ணெயில் புரட்டி… கடுகுப் பொடி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூளை பரவலாகப் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். மாங்காய் தோல் சுருங்கி ஊற ஆரம்பிக்கும். ஒரு வாரம் வரை டப்பாவை குலுக்கிவிடவும். அதில் உப்பு, காரம் இறங்கி சுவை அலாதியாக இருக்கும்.
The post வடுமாங்காய் ஊறுகாய் appeared first on Dinakaran.