வடிவேலுவின் "கேங்கர்ஸ்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

6 hours ago 1

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வின்னர் படத்தின் கைப்புள்ள, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் மறுப்பக்கம் படத்தின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.

இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதாவது, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. "கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#Gangers April 24th Release pic.twitter.com/0t9ni9I5yA

— Karthik Ravivarma (@Karthikravivarm) March 3, 2025
Read Entire Article