வடக்கஞ்சேரியில் ஒரே சேலையில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

3 weeks ago 5

*பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு

பாலக்காடு : திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வடக்கஞ்சேரி அருகே இளம் காதல் ஜோடி ஒரு சேலையின் இரண்டு பக்க முனைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரியை அடுத்த வேங்கனூரை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவரது மகள் உபன்யா (18). வடக்கஞ்சேரியை அருகே குத்தனூர் அடுத்த சிம்புக் காட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சுகின் (23). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் நேற்று முன்தினம் இரவு கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு 11 மணியளவில் உபன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலர்கள் இருவரும் ஒரு சேலையின் இரு முனைகளில், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் கோயில் திருவிழாவை பார்த்து விட்டு உபன்யாவின் சகோதரர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது தங்கையும், காதலரும் தூக்கில் சடலமாக தொங்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ஓடிச்சென்று அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து லடக்கஞ்சேரி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வடக்கஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடக்கஞ்சேரியில் ஒரே சேலையில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article