வடகொரியா மீண்டும் அதிரடி புதிய கப்பலில் ஏவுகணை சோதனை

2 weeks ago 3

சியோல்: வடகொரியா புதிய தாக்குதல் கப்பலில் இருந்து முதல் ஏவுகணை சோதனை செய்துள்ளது. வடகொரியா கடந்த வாரம் தனது போர்க்கப்பல் துறையில் கட்டமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை கொண்ட 5000 டன் எடை கொண்ட புதிய தாக்குதல் போர்க்கப்பலை வெளியிட்டது. அதிபர் கிம் ஜாங் உன் இதனை மேற்பார்வையிட்டார்.

சூப்பர் சோனிக் மற்றும் மூலோபாய கப்பல் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணை, தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் மின்னணு ஜாமிங் துப்பாக்கிகளின் சோதனைகளை இந்த வார தொடக்கத்தில் அதிபர் கிம் பார்வையிட்டார். இந்நிலையில் புதிய தாக்குதல் கப்பலில் இருந்து முதல் ஏவுகணை சோதனையை வடகொரியா நேற்று நடத்தியது.தொடர்ந்து கப்பலின் சக்திவாய்ந்த தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் வழக்கமான பாதுகாப்பு கவசங்களை கிம் பாராட்டினார்.

The post வடகொரியா மீண்டும் அதிரடி புதிய கப்பலில் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article