வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் 300 பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

2 months ago 16

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் வைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளம்பர பேனர்கள் மூலம் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் சுவரொட்டிகள் அகற்றும் பணிகளும் தீவிரமாக கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் 300 பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article