வடகிழக்கு பருவமழையால் ஆடு, மாடுகளுக்கு பசுந்தீவனத்திற்கு பஞ்சமில்லை

3 weeks ago 5

*கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

வருசநாடு : பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலாடும்பாறை பகுதியில் கால்நடைகளுக்கு இயற்கை பசுந்தீவனம் தாராளமாக கிடைப்பதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடமலை மற்றும் மயிலாடும்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் முக்கிய பங்களிக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு தொழிலும் பிரதானமாக உள்ளது. இந்தப்பகுதியில் சாதரணமாக வீட்டில் ஆடு மற்றும் மாடுகள் வளர்க்கப்படும்.

இதனை தவிர்த்து, ஆட்டுப் பண்ணைகளும், மாட்டுப் பண்ணைகளும் வைத்துள்ளனர். இங்கு வளர்க்கப்படும் கால்நடைகளை அவர்களது தோட்டத்து பகுதியிலும். மலையடிவார பகுதிகளிலும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தினாலும், வெயில் அதிகரித்து இருந்த காரணத்தினாலும் கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் இல்லாமல் தவித்து வந்தனர். வெயிலால் தீவனங்கள் காய்ந்து கிடந்தது. பசுந்தீவனம் கிடைக்காததால் கடைகளில் தீவனங்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். வெயில் அதிகரித்து வந்ததால் இயற்கை பசுந்தீவனங்கள் இல்லாமல் கடைநடை வளர்ப்போர் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில், பருவமழை தொடங்கியதால் இந்தப் பகுதியில் சாரல் மழையும், காற்றுடன் கூடிய மழையும் அடிக்கடி பெய்து வருகிறது.

மேலும் கடந்த ஒரு வாரமாக வெயில் இல்லாமல் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாய தோட்டப் பகுதியிலும், மலையாடிவார பகுதியிலும் இயற்கை பசுந்தீவனமான புல், செடிகள், கீரை வகைகள் போன்றவை தளர்ந்து காணப்படுகிறது.

இதனால், கால்நடைகள் பசுந்தீவனம் இயற்கையாக கிடைக்கிறது. மேலும் ஆங்காங்கே, அவ்வப்போது மழை பெய்து வருவதால், கிராமங்களில் உள்ள சிறு குளம், விவசாயத்திற்கு தேக்கி வைக்கப்பட்டிருக்கு நீர்தேக்கம், ஓடை போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஓரளவு நீங்கியுள்ளது. கால்நடைகளுக்கு இயற்கை பசுந்தீவனம் கிடைப்பதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழையால் ஆடு, மாடுகளுக்கு பசுந்தீவனத்திற்கு பஞ்சமில்லை appeared first on Dinakaran.

Read Entire Article