உத்தரகாண்ட்: வடமாநிலங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சாமோலியில் இடுப்பு அளவுக்கு வெள்ளம் பாயும் அலக்நந்தா ஆற்றில் ரேஷன் பொருட்களுடன் ஒருவர் கடந்து செல்லும் கட்சி வெளியாகியுள்ளது. சாமோலியன் கர்ணபேர்லேல்யாவில் இருந்து பத்ரிநாத் செல்லும் மலைபாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்துக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது. சாலையில் குவிந்த பாறைகள் அகற்றும் பணி முழுவீழ்ச்சியில் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் செல்லும் முக்கிய சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேச மாவட்டத்தில் வேகவெடிப்பாள் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் துனாக் தாலுகா பெரும் சேதத்திற்கு உள்ளானது. வெள்ளத்தின் சீற்றத்தில் பல வீடுகள் கடும் சேதம் அடைந்தன. தரப்போர் குன்றில் நிலச்சரிவில் வீட்டைச்சுற்றி அமைத்திருந்த நீலம் உள்வாங்கியதால் ஒற்றை பறை மீது வீடு மட்டும் தனித்து விடப்பட்டு இருப்பது பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ளத்தால் 69பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காணாமல் போய்யுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை தொடரும் என தெரிவித்துள்ள இந்தியா வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலட் விடுத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஜகல்பூர் அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. ஆற்று பலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் கரைபுரண்ட போது அதனை கடக்க முயன்ற போது சிக்கிய மூழ்கியது. லாரியில் இருந்து குதித்து ஓட்டுநரும், உதவி ஆய்வாளரும் உயிர் தப்பினர்.
மத்தியபிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் பெய்த கனமழையால் நர்மதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் திடீர் என்று மாலையில் அரை மணி நேரம் கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது. முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். குஜராத் மாநிலம் சுரேந்திரா நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.
The post வட மாநிலங்களில் பரவலாக பெய்துவரும் மழை: இமாச்சலில் இரு வாரங்களில் 69 பேர் பலி; 37 பேர் காணவில்லை appeared first on Dinakaran.