புதுடெல்லி: டெல்லி-என்சிஆர் பகுதி டெல்லி, உபி, காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. . தென்மேற்கு டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 28 வயதுடைய ஒரு பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில், மின்னல் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். டெல்லி, குருகிராம், பரிதாபாத் மற்றும் மதுராவில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூன்று மணி நேரத்தில் 77 மிமீ மழை பெய்தது. காஷ்மீரில் செனாப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரியாசி மற்றும் அக்னூர் ஆற்றங்கரைக்கு அருகில் செல்லக்கூடாது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
The post வட இந்தியாவில் கனமழை 7 பேர் பலி appeared first on Dinakaran.