திருச்சி: திருச்சியில் வங்கி முன் போராட்டம் நடந்த முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கந்திரை போலீசார் வீட்டுகாவலில் வைத்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகளுக்கு மாநிலம் மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும், மேலும் சிபில் ஸ்கோர் முறையை வைத்து விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மன்னார்புரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு நேற்று போராட்டம் நடத்த இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மற்றும் சங்க விவசாயிகள் பலரை கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டினுள் மாநகர போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர்.
The post வங்கி முன் போராட்டம் நடந்த இருந்த விவசாய சங்கத்தினருக்கு போலீசார் வீட்டுக்காவல் appeared first on Dinakaran.