வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு

2 days ago 3

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்டில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தால், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். இதனிடையே, வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்தாண்டு ஜூன் மாதம், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில், வெகுஜன போராட்டத்தை கலைக்க ஹசீனா குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது ஷேக் ஹசீனா ஆஜராக வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அவரை நாடு கடத்தும்படி முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஷேக் ஹசீனா விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பினை முகமது கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கி உள்ளது.

The post வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article