டெல்லி: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. வங்கதேசத்திடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரியுள்ளது. ஷேக் ஹசீனாவின் வங்கதேச பாஸ்போர்ட்டையும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஆக.5ம் தேதி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
The post வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை நீட்டித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.