வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்; சதிவேலை காரணமா? என விசாரணை

3 weeks ago 5

டாக்கா: வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமடைந்தன. வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரேநேரத்தில் தலைமை செயலகத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட தீ காரணமாக அந்த இடமே புகை மண்டலாமாக மாறியது. இதில் கட்டிடம் எண் 7ல் அமைந்துள்ள ஆறு, ஏழு, எட்டாவது தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒன்பது மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து யூனுஸ் தலைமையிலான அரசின் அமைச்சர் ஆசிப் மஹ்முத் சஜீப் பூயான் கூறியதாவது, “இந்த விபத்து சதிகாரர்களின் நாசவேலையால் நடந்திருக்கலாம். விபத்து குறித்து விசாரிக்க உயர் அதிகாரம் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

The post வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்; சதிவேலை காரணமா? என விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article