வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்: புதுச்சேரி – சென்னை இடையே கரையை கடக்கும்

1 hour ago 2

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நவம்பர் 28-ல் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்கள் தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றுழத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் 2 மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

காற்றுழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் போரிட்டு இடங்களில் அதிகாணாமலைக்கு வாய்ப்பு உள்ளது. நகையில் இருந்து 590 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக வலுப்பெறுகிறது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.

வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கில் 800 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது தாழ்வு மண்டலம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு தெற்கு – தென்கிழக்கில் 710 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்.

நாளை 3.7 மீட்டர் உயரம் வரை கடல் அலை மேலெழும்பக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சென்னையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி வரை மழை தொடரும் என அறிவிதுள்ளது. புதுவை தொடங்கி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை தொடர்ச்சியாக இருக்கும். வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்; புதுச்சேரி – சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

The post வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்: புதுச்சேரி – சென்னை இடையே கரையை கடக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article