வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

1 month ago 4

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Read Entire Article