வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுமென வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எதிர்பார்த்ததை விட காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக நகர்வதாகவும், வருகிற 11 ஆம் தேதி தமிழக கடலோர பகுதியை அது நெருங்கக் கூடுமென்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வருகிற 11 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை தீவிரமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.