
மும்பை,
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காங்கிரசின் அழுத்தம் காரணம் இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
வக்பு வாரிய திருத்த மசோதா குறித்து உத்தவ் சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சில நல்ல கூறுகள் உள்ளன. ஆனால் நீங்கள் வக்பு நிலத்தின் மீது கண்வைத்துள்ள நோக்கம் வேறு.
அந்த நிலத்தை அபகரித்து உங்களது தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். இந்த போலித்தனத்தால் நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம். கோவில் அறக்கட்டளைகள், தேவாலயங்கள், குருத்வாராக்களிடமும் நிலம் உள்ளது. நீங்கள் நாளை இந்த நிலங்கள் மீதும் கண்வைக்கலாம். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காங்கிரசின் அழுத்தம் காரணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.