ராமேசுவரம்: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரசாக்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு, 'தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் வக்பு நிறுவனங்களின் அனைத்து முத்தவல்லிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரசாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் அனைத்து அனுமதிகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்க தயாராக உள்ளது, என அறிவிக்கப்பட்டிருந்தது.