சென்னை: வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு நடத்தி வருகிறது. ஆனால், இன்று வரையும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறும் திமுக அரசு, கேரளத்தை போல தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆதரவாக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முதல்வரை வலியுறுத்த வேண்டும்.