வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தாம்பரத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

2 weeks ago 3

தாம்பரம்: வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தாம்பரத்தில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து, தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர், தாம்பரம் சண்முகம் சாலையில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், தாம்பரம் வட்டார முஸ்லிம் ஜமாத்தினர், கூட்டணி கட்சிகள், இஸ்லாமி யர்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Read Entire Article