வகுப்பறையில் ஆசிரியைக்கு 'மசாஜ்' செய்த மாணவன்

3 months ago 25

ஜெய்ப்பூர்,

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சில ஆசிரியர்-ஆசிரியைகள் தங்களின் சொந்த வேலைக்கு பயன்படுத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. குறிப்பாக பள்ளி மாணவர்களை டீ, காபி வாங்கி வர ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக ஆங்காங்கே புகார்களும் கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் மாணவனை மசாஜ் செய்யக்கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கர்தார்புராவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ரேகா சோனி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். 3-ம் வகுப்பு ஆசிரியையான இவர் தனது வகுப்பறையில் மாணவர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. அதில், வகுப்பறையில் படுத்திருக்கும் அந்த ஆசிரியையின் காலில் மாணவர் ஒருவர் மசாஜ் செய்து கொண்டிருப்பதும், பிற மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை பார்த்த கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அத்துடன் மூத்த அதிகாரி ஒருவரை பள்ளிக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். அப்போது வகுப்பறையில் இந்த விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே அந்த ஆசிரியையை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியையின் செயல் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article