வகுப்பறையில் ஆசிரியை படுகொலை: தமிழக அரசின் குறைகளைப் பட்டியலிட்டு ஊழியர்கள் சங்கம் காட்டம்

1 hour ago 2

மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூரில் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பயிற்சி தமிழாசிரியர் ரமணி (26) பள்ளி வளாகத்தில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டார். சமீபகாலமாக தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களில் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

Read Entire Article