லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது

2 months ago 22

சென்னை: நடப்பாண்டு பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் பி.எட். படிப்பில், தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 26ம் தேதி நிறைவடைந்தது. நடப்பாண்டு பி.எட். படிப்பிற்கு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் www.tngasa.in இணையதள முகவரியில் நேற்று (செப்.30) வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது. பாட வாரியாக நடைபெற உள்ள இந்த கலந்தாய்விற்கு, எந்தெந்த தேதியில் வரவேண்டும் என்ற தகவல்களை மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வருகிற 3ம் தேதிக்கு மேல் அனுப்பப்பட உள்ளதாக என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Read Entire Article