லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்: குடியிருப்புகளை குறிவைத்து குண்டுகள் வீசியதில் 40 பேர் மரணம்

2 months ago 12

லெபனான்: லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல் ராணுவம் குடியிருப்புகளை குறிவைத்து குண்டுகளை வீசியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். போர் தொடங்கிய முதல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்துவரும் நட்பு நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் கலையெடுப்பதாக கூறி அந்நாட்டின் மீது ஓராண்டாக நடத்தப்பட்ட தாக்குதலில் 3000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் தெற்கு கிராமங்களை குறிவைத்து இஸ்ரேலக் குண்டு மழை பொழிந்தது. பால்பேக் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 53 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியோரை தேடும் பணி தொடர்கிறது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனான் நேற்று 50 ஏவுகணைகளை அந்நாட்டு ராணுவத்தலத்தை குறிவைத்து வீசியது. இதில் சேமிப்பு கிடங்கு ஒன்று மட்டுமே சேதமடைந்திருப்பதாகவும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்: குடியிருப்புகளை குறிவைத்து குண்டுகள் வீசியதில் 40 பேர் மரணம் appeared first on Dinakaran.

Read Entire Article