லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு

3 months ago 28
ஹெஸ்பொல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இரவு முழுவதும் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். பெய்ரூட்டில் பல இடங்களில் குண்டுகள் வெடித்து புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. பல கட்டடங்கள் தரைமட்டமாகி உருக்குலைந்து காணப்படுகின்றன. இதற்கிடையே, தெற்கு லெபனான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதலின்போது, ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள கலிலீ நகரை கைப்பற்றும் நோக்கில் ஹெஸ்பொல்லா அமைப்பினர் திட்டமிட்டிருந்ததை தரைவழித் தாக்குதல் மூலம் முறியடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Read Entire Article