லெபனானில் இஸ்ரேல் விமானப்படை வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு, 117 பேர் படுகாயம்

6 months ago 35
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குறிப்பிட்ட ஹெஸ்போலா  இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 117 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பினருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் இரண்டு குடியிருப்பு வளாகங்கள் சேதம் அடைந்ததாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கட்டடங்களில் தீயும் புகையும் காணப்பட்டது. மக்கள் பலர் இரவோடு இரவாக அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் தேடி ஓடியதாக நேரில் பார்த்த சிலர் விவரித்தனர்.
Read Entire Article