
வியன்டியன்,
ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள ராயல் தியேட்டரில் நாடக குழுவால் அரங்கேற்றம் செய்யப்பட்ட ராமாயண இதிகாச நாடகத்தை பிரதமர் மோடி கண்டுகளித்தார்.
ராமாயணத்தில் வரக்கூடிய பால காண்டத்தை நாடக கலைஞர்கள் அரங்கேற்றம் செய்தனர். தொடர்ந்து ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த கலைஞர்களோடு இணைந்து பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.